க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்குகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது
எமது அமைப்பின்(EFOC) கல்வி மேம்பாட்டு திட்டத்தின் தொடர்ச்சியாக ஆனந்த இல்லம் அமைப்புடன் இணைந்து இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்குகள் தமிழ் பிரதேசங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது . இந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மற்றும் கோறளைப்பற்று வடக்கு கஷ்ட பிரதேசத்திலுள்ள 11 பாடசாலைகளில் கல்வி பயிலும் 280 மாணவர்கள் அண்மைய கருத்தரங்குகளில் கலந்துகொண்டு பயன் பெற்றுள்ளார்கள்.