சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம், தமிழ் ஆகிய பாடங்களுக்கான விசேட செயலமர்வு நடைபெற்றது
எமது அமைப்பின் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் சங்கத்துடன் இணைந்து இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம், தமிழ் ஆகிய பாடங்களுக்கான விசேட செயலமர்வு#3 பல்வேறுபட்ட பாடசாலைகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இவ்வகையில் அம்பாரை மாவட்ட கஷ்ட பிரதேச பாடசாலைகளில் ஒன்றான சொறிக்கல்முனை ஹோலி கிராஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் தமிழ் விஞ்ஞான பாடங்களுக்கான விசேட செயலமர்வு கருத்தரங்கு நேற்று இடம்பெற்றது. இதை ஒழுங்குபடுத்திய எமது செயற்பாட்டாளர் திரு சரண்தாஸ் மற்றும் விரிவுரையாளர் திரு சனா ஆகியோருக்கு எமது நன்றிகள்.