மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது
எமது அமைப்பின் கல்வி மேம்பாட்டு நடவடிக்கையின் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டம் வலையிறவு மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் திரு இலங்கேஸ்வரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வருமானம் குறைந்த குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு ஒரு தொகை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சார்பில் ஆசிரிய ஆலோசகர் திருமதி இந்திர குமாரன் அவர்களுடன் திரு தங்கேஸ்குமார் மற்றும் எமது அமைப்பின் செயற்பாட்டாளர்கள் திரு ஏ.உதயகுமார் ,திரு இ.சுதர்சன், திருமதி சியானி ராஜ் ஆகியோருடன் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.இந்த நிகழ்வுக்கான நிதி அனுசரணை வழங்கிய FBM group Canada , மற்றும் லண்டன் வாழ் பெயர் குறிப்பிட விரும்பாத மூன்று நண்பர்களுக்கும் இந்நிகழ்வை ஒருங்கிணைத்த எமது செயற்பாட்டாளர் திரு உதயகுமார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.