அம்பாறை மாவட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது
எமது அமைப்பின் கொரோனா இடர் கால உதவித் திட்டத்தின் கீழ் இன்று அம்பாறை மாவட்டத்தின் சேனைக்குடியிருப்பு, பாலமுனை பெரியநீலாவணை ஆகிய கிராமங்களிலிருந்து உணவு கஷ்டத்தை எதிர்நோக்கும் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் எமது அமைப்பின் செயற்பாட்டாளர்கள் திரு குணராசா,பிரவீந்த் சனாதனன் கஜானந், வேணுதாஸ் மற்றும் சரண் தாஸ் ஆகியோரால் வழங்கிவைக்கப்பட்டது . காலம் அறிந்து செய்யப்படும் இந்தச் உதவித் திட்டத்தில் பணியாற்றிய செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.