திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது
திருகோணமலை மாவட்டம்- கங்குவேலி புளியடிச்சோலை , லிங்கபுரம் பெரியவெளி ஆகிய கிராமங்களிலுள்ள தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு இன்று உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
எமது திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் திரு Rapisanan மற்றும் அவரது நண்பர்களின் ஒருங்கிணைப்பில் இது நடைபெற்றது.*( எதிர்வரும் நாட்களில் இலங்கையில் ஏனைய பகுதிகளிலும் பயணத் தடை காரணமாக கஷ்டப்படும் தெரிவு செய்யப் பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட இருக்கிறது)