திருகோணமலை மாவட்ட சாதாரண தர மாணவர்களுக்காக கருத்தரங்கு நடாத்தப்பட்டமை
இம்முறை சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக எமது அமைப்பினால் நடாத்தப்பட்டு வரும் கருத்தரங்கின் தொடர்ச்சியாக(#5) திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று கோட்டக் கல்வி கல்வி நிலையத்தை சேர்ந்த சண்முகா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விசேட செயலமர்வில் மாவடிச்சேனை- வெருகலம்பதி தமிழ் மகா வித்தியாலயம், ஈச்சிலம்பற்று- சண்முகா வித்தியாலயம், பூநகர் திருவள்ளுவர் வித்தியாலய மாணவர்கள் கலந்து கொண்டார்கள். பள்ளிக்குடியிருப்பு நண்பர்கள் குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்ட இக்கருத்தரங்கில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு அருள் சிவம் கலந்துகொண்டார்.


