பாரதி தமிழ் மகா வித்தியாலயம், திகிலிவட்டை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது
கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கிரான் பிரதேச செயலாளரினால் தெரிவுசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் அதி கஷ்ட பிரதேசங்களான புலிபாய்ந்தகல் தமிழ் மகா வித்தியாலயம் (கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலக அலுவலலத்திலிருந்து மிகத் தொலைவிலும் மிக மோசமான காட்டுப் பாதையாலும் இவ் ஊர் மக்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்) கிரான்- பாரதி தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் திகிலி வட்டை -தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எமது அமைப்பால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் ராஜ்பாபு மற்றும் எமது அமைப்பின் செயற்பாட்டாளர்கள் திரு சுதர்சன், திருமதி சியானி ராஜ் ஆகியோருடன் கல்வி திணைக்களத்தை சேர்ந்த பல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்த கிரான் பிரதேச செயலாளர் திரு ராஜ் பாபு மற்றும், இதற்கு நிதி அனுசரணை வழங்கிய கனடா டொரன்டோ நகரில் இயங்கும் FBM group நிறுவனத்துக்கும் எமது நன்றிகள்.