பின்தங்கிய கிராமப் புறபாடசாலைகளில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான விஷேட கருத்தரங்குகள் நடைபெற்றமை
வணக்கம் நண்பர்களே.. எமது அமைப்பின் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் இவ்வருடத்துக்கான இரண்டாம் கட்ட நிகழ்வாக மிகவும் பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகள் ஆன அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் வீரமுனை ராமகிருஷ்ண மிஷன் தமிழ் பாடசாலை ஆகியவற்றில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான விஷேட கருத்தரங்குகள் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இக்கருத்தரங்கை திறம்பட நடத்திய எமது செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்.