வவுணதீவு பகுதியைச் சேர்ந்த வருமானம் குறைந்த குடும்ப மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், பாதணிகள் வழங்கப்பட்டது
மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக சென்ற வாரம் மட்டக்களப்பு வவுணதீவு மேற்கு பகுதியைச் சேர்ந்த வருமானம் குறைந்த குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு கரவெட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் எமது அமைப்பின் செயற்பாட்டாளர்கள் திரு உதய குமார், திரு சுதர்சன் ஆகியோருடன் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களுடன் கல்வி திணைக்களத்தை சேர்ந்த பல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.