35 கட்டில்கள் மெத்தைகள் எமது அமைப்பின் சார்பில் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது
வணக்கம் நண்பர்களே, கிளிநொச்சியில் இயங்கும் விசேட தேவையுடைய சிறுவர்களை பராமரிக்கும் இல்லத்திலிருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய விசேடமாக வடிவமைக்கப்பட்ட 35 கட்டில்கள் மெத்தைகள் எமது அமைப்பின் சார்பில் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. எமது வேண்டுகோளை ஏற்று குறுகிய காலத்தில் நிதி அனுசரணையில் பங்குகொண்ட கனடா- டொரன்டோ நகரில் வாழும் பல அன்பு உள்ளங்களுக்கும் இதை திறம்பட ஒழுங்கமைத்த எமது செயற்பாட்டாளர்கள்
திரு நடராஜ லிங்கம், திரு அஜிலெவன் மற்றும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பல சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.





