கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் கல்வி பயிலும் சாதாரணதர மாணவர்களுக்கான கருத்தரங்கு இடம்பெற்றது
எமது அமைப்பும் பேராதனை பல்கலை கழக தமிழ்ச் சங்கமும் இணைந்து சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக நடாத்தும் விசேட கருத்தரங்கின் தொடர்ச்சியாக கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் கல்வி பயிலும் சாதாரணதர மாணவர்களுக்கான கருத்தரங்கு நேற்று இடம்பெற்றது.
இராவணா இளைஞர் கழகத்தினரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் எமது செயற்பாட்டாளர் திரு சரண்தாஸ் மற்றும் திரு நவீன் திரு சனா திரு பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


