பூப்பந்தாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் பரிசுத் தொகையும் வழங்கி வைக்கப்பட்டது
மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்டம் சங்கத்தினர் விசேடமாக ஒழுங்கமைக்க பூப்பந்தாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் பரிசுத் தொகையும் அண்மையில் எமது அமைப்பால் வழங்கிவைக்கப்பட்டது.
உலகத் தமிழ் பூப்பந்தாட்ட பேரவையின் (WTBF) மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் எமது அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசில்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தனர்.




